பாடல் பாடி வழிபாடு.... …நாதம் என்றால் பாட்டு
இறைவனை உளமுருக பாடி வணங்குவதே மிகவும் உயர்ந்தது என, பக்தி நுால்கள் குறிப்பிடுகின்றன.
அவ்வகையில், பாடி வணங்க, உயர்ந்த ஸ்தலங்கள் இந்தியாவில் ஐந்து உள்ளன.
அவற்றை, பஞ்சநாத ஸ்தலங்கள் என்று அழைக்கின்றனர்.
அவை, விஸ்வநாதம், சோமநாதம், வைத்தியநாதம், ஜகந்நாதம் மற்றும் ராமநாதம்.
பாடித் துதித்திடுவோம்…….
பல்லவி
பாடித்துதித்திடுவோமந்த பஞ்சத்திருத்தலங்களை
நாடிப்பணிந்திடுவோமீசன் திருவடியை
அனுபல்லவி
வாடிய மனங்களை வளம் பெறச்செய்திடும்
தேடிடுமனைத்தையும் கிடைத்திட வைக்குமதை
சரணம்
சோமநாதனும் ராம நாதனும்
வைத்திய நாதனும் விச்வ நாதனும்
வீற்றிருக்கும் திரு த்தலங்கள் மற்றும்
கேசவன் ஜகந்நாதனுறை பூரியையும்
No comments:
Post a Comment