உனக்கென்ன…..
பல்லவி
உனக்கென்ன கோபம் சாகேத ராமா
அனவரதமுனையே துதித்திடும் என்மீது
அனுபல்லவி
தனக்குவமை இல்லாத மாதவனே கேசவனே
ஜனகனின் மருமகனே ஜானகி நாயகனே
சரணம்
மனமார உனையே நினைந்து வணங்கிடும்
எனை நீ சினந்து பிணங்கினாலேழையேன்
எங்கு செல்வேன் வேறு எவரிடம் முறையிடுவன்
உனையன்றி வேறோர் துணையில்லை ஐயனே
No comments:
Post a Comment