மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற
நாடித்துதித்திடும்….
பல்லவி
நாடித்துதித்திடும் பக்தருக்கருள் தரும்
ஈடிணையில்லாத கண்ணனைப் பாடித்துதி
அனுபல்லவி
தேடி வரும் கோபியர்களுடனாடிக் களித்து
மோடி செய்யும் மாயனைப் பாடித்துதி
சரணம்
மாடுகளை மேய்த்தவனைப் பாடித்துதி
வீடுகளில் புகுந்து வெண்ணை திருடிய
பீடுடைய கேசவனைப் பாடித்துதி
காடுகளில் குழலூதித் திரிபவனைப் பாடித்துதி
No comments:
Post a Comment