இன்னலிடர்…..
பல்லவி
இன்னலிடர் தருபவனும் அதைத்தீர்ப்பவனும்
புன்னகை முகத்தோன் குருவாயுரப்பனே
அனுபல்லவி
பன்னக சயனன் சென்ன கேசவன்
தன்னிகரில்லாத பவனபுரக் கண்ணன்
சரணம்
என்னேரமுமவன் திருவடி பணிவோர்க்கு
அன்னையாய்த் தந்தையாய் தோழனாயனைத்துமாய்
முன்னும் பின்னுமனைத்து வழிகளிலும்
முன் நின்று காத்தருளும் தெய்வமுமவனே
No comments:
Post a Comment