வெண்ணையுண்ட…
பல்லவி
வெண்ணையுண்ட வாயனை மண்ணையுண்ட கண்ணனை
எண்ணத்தில் வைத்து அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
தண் மதிமுகத்தானை தாமரை மலர் நாபனை
வெண் கதிரோனைப் பழிக்கும் தேசுடையவனை
சரணம்
மண் மகள் திருமகள் இருபுறமுடையோனை
மண்ணையும் விண்ணையும் மூவடியாலளந்தவனை
குன்றமேந்திக் குளிர்மழை காத்தவனை
இன்றும் திருவேங்கடத்தில் நின்றருள்பவனை
விண்ணாளுமிந்திரனும் மண்ணாளும் வேந்தர்களும்
புண்ணியம் செய்தோரும் துதித்திடும் கேசவனை
வண்ணமிகு அழகனை மாயக் குழலோனை
பண்ணிசைத்துப் பாடி பரவசமடைந்தேன்
No comments:
Post a Comment