Friday, 16 September 2022

கடல் நடுவே……

 சென்றால் குடையாம் 

இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம் 
பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு

பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி பாசுரம்

விளக்கம்:
பிராட்டியோடு எப்போதும் கூடியிருக்கிற பெருமானுக்கு - திருவனந்தாழ்வான்,
உலாவும் போது மழை, வெயில் படாதவாறு குடையாக வடிவு கொண்டு கைங்கர்யம் செய்கிறார்.
உட்காரும் போது அவருக்கு ஸிம்ஹாஸமாக வடிவு கொண்டு கைங்கர்யம் செய்கிறார்
நின்று கொண்டிருந்தால் மரவடி (பாதுகையாக) வடிவு கொண்டு கைங்கர்யம் செய்கிறார்
சயனிக்கும்போது திருபள்ளியாக ( மெத்தையாக) வடிவு கொண்டு கைங்கர்யம் செய்கிறார். (திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவன்)
அருகில் எப்போதும் திருவிளக்காக (மங்கள தீபமாக) இருக்கிறார். அழகிய வஸ்திரமாகவும், தழுவிக்கொள்வதற்கு உரிய அணையுமாகவும் இருந்து இருக்கிறார்!


                                                          கடல் நடுவே……


                                                              பல்லவி

                                         கடல் நடுவே பள்ளிகொண்ட திருமால் கேசவன்

                                         கிடந்திடும் அரவணையாம் அனந்தனெனுமரவு

                                                         சமஷ்டி சரணம்

                                         நடந்தால் குடையாவான் இருந்தாலாசனமாவன்

                                         கிடந்தலணையாவான் நின்றால் பாதுகையாவான்

                                         கடல் நடுவே மிதக்கும் தெப்பமுமாயிருப்பான்

                                         உடல் தழுவும் உடையாய் ஒளிறும் விளக்காவான்

                                          

No comments:

Post a Comment