வஞ்சுளவல்லி சமேத……
பல்லவி
வஞ்சுளவல்லி சமேத வாசனை
பஞ்சவர் நேசனைக் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
கஞ்சனைக் காய்ந்த கண்ணபிரானை
குஞ்சர வடிவில் வந்த அசுரன் கொம்பொடித்தவனை
சரணம்
வெஞ்சமரில் அரக்கர் மதுகைடபரை மாய்த்த
அஞ்சாநெஞ்சனை மதுசூதனனை
நஞ்சுண்டகண்டனின் இடர் கெடுத்த மாலனை
தஞ்சமடைந்தோரின் நலம் காக்கும் மாதவனை
No comments:
Post a Comment