தேசுடைய……
பல்லவி
தேசுடைய கேசவனை அத்திகிரி வரதனை
வாச மலர் தூவித் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
மாசுச என்று அபய கரம் நீட்டும்
வாசுதேவனைப் பேரருளாளனை
சரணம்
ஆசா பாசத்தளைகளை விலக்கிடும்
மாசிலாமணியை மதுசூதனனை
நீச நிசாசரரையழித்த மாதவனை
காசினி போற்றும் ஶ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment