Monday, 12 September 2022

தண்ணீருள் கிடந்த…..

 2090 பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று 

உன்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட 
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண்
விரி தோட்ட–ஒளி விரிகின்ற திருக் குண்டலங்களை அணிந்துள்ளவனே!
சே அடியை நீட்டி–செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க–பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க–மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்–(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த–நீ அளந்து திருவடி கீழ் இட்டுக் கொண்ட
மண்–பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்–நிலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப் பற்களை யுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்
புக்கு–(பிரளய ஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று–அண்ட பித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த அக்காலத்தில்
உன்–உன்னுடைய
ஒரு கோட்டின் மேல்–ஒரு கோரப் பல்லின் ஏக தேசத்திலே
கிடந்தது அன்றே–அடங்கிக் கிடந்த தல்லவோ?

    2090. You took the form boar and on your single tusk
    you brought up the earth goddess from the underworld.
    Was that not the same earth that you measured 
    with your divine feet 
    as the sky and all the directions trembled? 

                                      தண்ணீருள் கிடந்த…..

                                           பல்லவி
                                தண்ணீருள் கிடந்த பூமியை மீட்டவனே
                                கண்ணியனே கேசவனே மலர்ப்பதம் பணிந்தேன்
                                        அனுபல்லவி
                                பண்டொரு நாளுலகை உண்டுமிழ்ந்தவனே
                                அண்ட சராசரங்களனைத்தையுமாள்பவனே                                                                                            
                                           சரணம்
                                விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் நடுநடுங்க
                                புண்ணியனே நீ எடுத்த பேருருவம் கொண்டு
                                திண்ணியமாயுன் சேவடியை நீட்டி
                                மண்ணினையுந்தன் ஒரு கோட்டின் மேலேந்தி
                                     

No comments:

Post a Comment