Thursday, 22 September 2022

கான மயூரியை…….

   


                        கான மயூரியை…….

                பல்லவி

கான மயூரியை கௌரியைத் துதித்தேன்
கோனந்த மலையரசன் மகளைப் பார்வதியை

            அனுபல்லவி

வானவர் தானவர் அயனரனரியும்
மோனத்தவம் செய்யும் முனிவரும் பணிந்தேத்தும்

                 சரணங்கள்

தேனார் மொழியாளைக்  கேசவன் சோதரியை
மானைப் பழிக்கும் அழகு விழியுடையாளை
மின்னல் இடையாளை மீனாக்ஷி தேவியை
பன்னகாபரணியைப்  பராசக்தியை

நவசக்கரத்தமர்ந்து நாதமாயிருப்பவளை
ஓங்காரப் பொருளை அமுதளிப்பவளை
ச்ருங்கார ரசத்தின் ஆதாரமானவளை
சங்கரன் மடியிலமர் பங்கயத்தை சங்கரியை

கணபதி முருகன் சிவனுடனுறைபவளை
பஞ்சகோசத்தின் உட்பொருளானவளை
ஆகம வேத சாத்திரப் பொருளை
சிந்தாமணி வீட்டிலமர்ந்திருப்பவளை
 
மந்தார மரத்தடியே வீற்றிருப்பவளை
சிந்தூரமணிந்த சிவகாமேச்வரியை
மந்திரப் பொருளாகி மாமேருதனிலமர்ந்த
சுந்தரியை ஶ்ரீ லலிதாம்பிகையை

 

 



No comments:

Post a Comment