தினமுனைத் துதித்தேனென்……
பல்லவி
தினமுனைத் துதித்தேனென் சென்ன கேசவா
மனமொரு நிலைபெற உனையே நினந்திட
அனுபல்லவி
தனந்தருமன்னை செங்கமலவல்லியை
உனது திருமார்பில் வைத்திருப்பவனே
சரணம்
தனதிச்சைப்படியே அலைந்து திரிந்திடும்
வனவிலங்கெனத் திகழுமென் அவயங்கள்
உனதருளாலே ஒரு நிலை பெறவே உன்
கனக க்கழலடியை வணங்கி வேண்டியே
No comments:
Post a Comment