சிவ காலை வணக்கம்
பாடல் எண் : 06
*****************
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான் செறு காலனே.
பொருள்:
***********
முனிவர்களும் தேவர்களும் சென்று, வேண்டிய வரங்களைக் கொள்ளும் இடமாவது, அந்தணர்கள் வாழும் தில்லைச்சிற்றம்பலம். ஆங்கும் உறையும் நடராசப் பெருமானுடைய செம்மையான அடிமலரைத் தொழுது ஏத்தச்செல்கின்ற மெய்யன்பர்கள்பால், காலன், அணுகமாட்டான்.
கனிந்தருள்…..
பல்லவி
கனிந்தருள் புரிந்திடுமீசனைத் துதித்தேன்
இனிப்பிறவா வரம் பெற வேண்டியே
துரிதம்
நந்தி கணங்கள் இந்திரன் மன்மதன்
மந்திரமோதும் அந்தணர் மறைகள்
கந்தன் கணபதி வணங்கிடுமரனை
அனுபல்லவி
புனிதனைப் புண்ணியனைக் கேசவன் நேசனை
வனிதை பார்வதிக்கொரு பாதி தந்தவனை
சரணம்
முனிவர்களும் தேவர்களும் அயனரியும் மற்றும்
சனி பாம்பிரண்டுடனே கோள்களனைத்தும்
பனிதரும் திங்களும் பாகீரதியும்
இனிது வணங்கிடும் பனிமலை நாதனை
No comments:
Post a Comment