அளவுடையார் அடைந்தார்க்கும், அதன் உரையே கொண்டவர்க்கும்,
வளவுரை தந்தவன் அருளே, மன்னிய மதவதொர்க்கும்,
கலவோழிவார் அமர் என, இசைந்தவர்க்கும் காவலராம்,
துலவ முடி அருள் வரதர், துவக்கில் எனை வைத்தேனே.
Unlike those great people who surrender or those who depend on the ,
Great teaching of others to surrender or those who depend on their teacher,
To help them complete the surrender or those who depend,
On other great devotees dear to lord to help them complete their surrender,
I have completed my surrender with the Varadan ,who gives boon of salvation.,
To all those who surrender by any of the four methods.
மிக முக்கியமாக கவனியுங்கள். இந்த பாசுரத்தில் சுவாமி தேசிகன் நான்கு சரணாகதி அடையும் (ப்ரபத்தி) உபாயங்களை கூறுகிறார்.
சிறந்த ஞானம் கொண்டவர்கள் தானாகவே ப்ரபத்தி செயது பயனடைவார்கள் இதையே ஸ்வ நிஷ்டை என்பார்கள். ஆழ்வார்கள், போற்றுதற்குரிய ஆசார்யர்கள் இதற்கு உதாரணம்.
சிலர் ஆசார்யன், என்னும் குரு மார்க்கமாக ப்ரபத்தி பெறுவார்கள். வேத சாஸ்திர நூல்கள் சொல்லும் வகையில், சரணாகதி மஹிமையை அறிந்து அதை பின்பற்றுபவர்கள். இத்தகைய சரணாகதி உக்தி நிஷ்டை எனப்படும். இவர்களை முமுக்ஷு என்பார்கள்.
சிலருக்காக குருவே ப்ரபத்தி செய்வார். அதுவே ஆசார்ய நிஷ்டை. மோக்ஷத்தை நாடும் முமுக்ஷுக்களுக்கு ஆசார்யன் பெற்று தரும் ப்ரபத்தி.
மற்றும் சிலர் என்ன செயகிறார்கள் தெரியுமா? மகா பக்தர்கள் எவ்வாறு பரமனை சரணாகதி செயது, பிரபத்தி புண்யம் பெற்றார்கள் என்று அறிந்து அவர்களை போற்றி பணிபவர்கள். ஆத்மா எனும் தான், பகவானின் அடிமை, அவனது உடைமை, என்று உணர்ந்தவர்கள். இப்படிப்பட்ட பக்தர்களை பரமனும் பெரிதும் நேசிக்கிறான். இப்படிப்பட்ட மஹா பக்தர்களின் சத்சங்கத்தில் இருப்பவர்கள் அதனால் அடையும் பலனைத்தான் பாகவத நிஷ்டை என்று கூறுகிறார் சுவாமி தேசிகன். உதாரணமாக கூறத்தாழவனோடு சத்சங்கத்தில் இருந்தவர்கள், விபீஷணனோடு கூடி இருந்தவர்கள் தாமும் முக்தி பெற்றது போல.
ஆகவே தான் இந்த பாசுர முடிவில் துளசி மாலை அணிந்த அந்த காஞ்சி அத்திகிரி வரதன் தன்னை இந்த நாலு வழியிலும் சரணடைந்தோர்க் கெல்லாம் முக்தி தருபவன். நானும் அதனால் அவனை சரணடைந்தேன் என்கிறார்.
திருவின் நாயகன்………
பல்லவி
திருவின் நாயகனை அத்திகிரி வரதனை
கௌஸ்துபம் துளபமணிந்தவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
வருந்தித் துதித்திடுமடியாரனைவரையும்
கருணையுடனரவணைத்து காத்திடும் கேசவனை
சரணம்
தானே துதித்துச் சரணடைவோரையும்
ஏனைய குருவருள் பெற்றுத் துதிப்போரையும்
குருவே சீடருக்காய் வேண்டும் பாங்குடையோரும்
திருவருள் பெற்றவருடனிருப்போரையும்
No comments:
Post a Comment