தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் -
சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல்
எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து
(மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்).
சடைமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்புமாக திருவேங்கடத்தான் இவருக்குத் தெரிகிறான். அப்படியே இருந்தால் தேவலை மீண்டும் பார்க்கும் போது நீண்ட முடியும், கையில் சக்கரமும், பொன்னால் செய்த ஆபரணங்கள் தரித்த திருமாலாகத் தோற்றம் தருகிறான். பண்டைத் தெய்வங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கையோடு கைகோர்த்து இளநடை பழகும் காட்சி இப்பாசுரத்தில் அற்புதமாய் வந்து நிற்கிறது. திருவேங்கடத்தான் இப்படியெனில் தில்லைக் கூத்தன் எப்படி இருக்கிறான் என்கிறீர்கள்?
இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய் வலப்பால் ஒண்கொன்றை வடமால்; இடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம்மான் இடமால் கரிதால் வலம் சேது இவனுக்கெழில் நலஞ்சேர் குடமால் இடம், வலம் கொக்கரை யாம் எங்கள் கூத்தனுக்கே
பொன்வண்ணத்தந்தாதி-சேரமான் பெருமாள் நாயனார்) இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான். இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து......
நடராஜனும் நாராயணனும்……
பல்லவி
நடராஜனும் நாராயணணுமொன்றே
நடமிடும் சிவனே குடமாடும் கூத்தன்
அனுபல்லவி
விட அரவணிந்தவன் பரமேச்வரன்
பட அரவணையில் துயில்பவன் கேசவன்
சரணம்
இடப்பாதி மங்கைக்குத் தந்தவனீசன்
மடந்தையை மார்பில் சுமப்பவன் திருமால்
வடக்கே கயிலாய மலைமீதமர்ந்தவனே
வட வேங்கடமலையில் காட்சியளிப்பவன்
No comments:
Post a Comment