சங்கரி மைந்தனை…..
பல்லவி
சங்கரி மைந்தனை ஐங்கரனைப் பணிந்தேன்
மங்களம் தரும் நவராத்திரி நந்நாளில்
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்தவனைக் கேசவன் மருகனை
பொங்கரவுதனை இடையிலணிந்மவனை
சரணம்
செங்கதிரோனைப் பழிக்குமொளியுடையவனை
கங்காதரன் மகனை ஆனைமுகத்தோனை
சங்கடமிடர்களையும் பங்கயப் பாதனை
முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட
No comments:
Post a Comment