வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் !
க்⁴ருʼதப்ரதீகாம்ʼ தாம்ʼ நித்யம்ʼ க்⁴ருʼதபூர்ணான்னதா³யினீம் |
யதே²ஷ்டவித்ததா³த்ரிம்ʼ ச நதோ(அ)ஸ்ம்யப⁴யதா³ம்ʼ ஸ்²ரியம் ||
பக்தர்களின் இல்லத்தில் எப்பொழுதும் நிரம்பி வழியும் அளவுக்கு தான்யம், நெய், வற்றாத செல்வம் ஆகியவற்றைத் தந்து அவர்களை காத்தருளும் தயை நிரம்பிய தாயான பரமேஸ்வரி தேவி மகாலக்ஷ்மீயை சிரம் தாழ்த்தி, துதித்து, வணங்கிப் பிரார்த்திக்கிறேன்.
பரமேச்வரியை……
பல்லவி
பரமேச்வரியை மகாலக்ஷ்மியை
கரம் சிரம் பணிந்து நமஸ்கரித்தேன்
துரிதம்
நரர் சுரரி்ந்திரன் தும்புரு நாரதர்
சுகசனகாதியரனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
முரளீதரன் கேசவன் மார்பிலுறை
அரனயன் வணங்கிடும் அழகிய அலைமகளை
சரணம்
நிரம்பி வழியும் தானியமும் நெய்யும்
குறைவிலாச் செல்வமும் நல்வாழ்வும் தயையும்
கரம் பணிந்தேத்துமடியார்க்கு வழங்கிடும்
கருணை நிறைந்தவளைத் திருவென்னும் கடல் மகளை
No comments:
Post a Comment