சங்கும் சக்கரமும்…….
பல்லவி
சங்கும் சக்கரமும் சார்ங்கமும் கதையுமேந்தும்
பொங்கரவணை துயிலும் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
பங்கய நாபனை சாரங்கபாணியை
மங்கை கோமளவல்லி மணாளனை
சரணம்
திங்களைப் பழிக்கும் திருமுகமுடையவனை
மங்களாம்பிகையின் அன்பு சோதரனை
எங்கும் நிறைந்திருக்கும் ஆராவமுதனை
மங்காத புகழ் மேவும் திருக்குடந்தைப் பதிவளர்
No comments:
Post a Comment