Tuesday, 13 September 2022

கருத்திலிருத்தி கரிமுகனே……

 ஸ்ரீ கணபதி த்யானம்!!

ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம் 
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

ஓம் கணநாயகனே கணபதி உனை அழைக்கின்றோம் 
அறிஞருள் மிக்க அறிவுடையோனே! நிகரில்லாப் புகழுடையோய்! 
தலைசிறந்த தலைவன் நீ! மறைகளின் முதல்வன் நீ! 
எம் அழைப்பிலே மனமகிழ்ந்து அழகோடு அமர்ந்தருள்வாய்! 
அருள்மிகு மஹா கணபதியே போற்றி!

गणानां त्वा गणपतिं हवामहे
कविं कवीनामुपमश्रवस्तमम् ।
ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत
 नः शृण्वन्नूतिभिः सीद सादनम् ॥

Meaning:
(This Mantra of Rig Veda 2.23.1 is addressed to Brihaspati / Brahmanaspati)
1: Among the Ganas (Group of Prayers), to You Who are the Ganapati (Lord of Prayers), we Offer our Sacrificial Oblations,
2: You are the Wisdom of the Wise and Uppermost in Glory,
3: You are the foremost King of the Prayers, presiding as the Lord of the Prayers (Brahmanaspati),
4: Please come to us by Listening to our Invocation and be Present in the Seat of this Sacred Sacrificial Altar (to charge our Prayers with Your Power and Wisdom).



                             கருத்திலிருத்தி கரிமுகனே……


                                      பல்லவி


                 கருத்திலிருத்தி கரிமுகனே துதித்தோம்

                 இருக்கையில் வந்தமர்ந்து எமக்கருள வேண்டுமென


                             அனுபல்லவி


                 பருத்த வயிறுடையவனே கேசவன் மருகனே

                 இருவினைப்பயனகல நீரே எம் துணையென


                                         சரணம்


                 அறிவில் சிறந்தவனே 

கணங்களின் தலைவனே
                 கருவிலுருவாகாத இறையே மறைபொருளே
                 பெருமையுடனழைத்தோம் வருகை தந்து ஆதரிப்பீர்
                 தரும் எமது படையலை தயவுடன் ஏற்பீர்

                                   

                                    

No comments:

Post a Comment