யார் சொல்லைக் கேட்டாயோ…,
பல்லவி
யார் சொல்லைக் கேட்டாயோ கேசவனே ஶ்ரீராமா
பார் மீதெனக்கருள ஏன் தயக்கம் காட்டுகிறாய்
அனுபல்லவி
ஓர் நாளுமுனையன்றி பிற தெய்வம் துதித்ததில்லை
கார் வண்ணனே என் மேல் உனக்கென்ன கோபம்
சரணம்
ஊர் சொல்லுமாயிரம் சொல் நீ கேட்கலாமோ
ஆரென்ன சொன்னாலும் நீயென்னை அறியாயோ
தேர்நடத்தி பார்த்தனுக்கு உதவியது போலவே
யார் சொல்லும் கேட்காமல் நீயெனக்கருள்வாயே
No comments:
Post a Comment