பாருலகில்….
பல்லவி
பாருலகில் உன்னயன்றி வேறெனக்கு யார் துணை
கார்வண்ண மேனியனே கண்ணனே கேசவா
அனுபல்லவி
ஊரிலேன் காணியில்லேன் உறவு மற்றருவரில்லேன்
மார்பிலே அன்னை மகாலக்ஷ்மியை வைத்திருப்பவனே
சரணம்
ஆறுகள் நதிகள் எல்லாம் அங்கிங்கென ஓடிய பின்
பேருகள் பெருமைகள் அனைத்தும் தொலைத்து
நீருடன் நீராகிக் கடலைச் சேர்வது போல
சேர்ந்திட ஆசை கொண்டேன் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment