हेमाद्रिशिखराकारं शुद्ध स्फटिक सन्निभं ।
पूर्णचंद्रनिभं देवं द्विभुजं वामनं स्मरेत् ।१।
पद्मासनस्थं देवेशं चंद्रमंडल मध्यगं ।
ज्वलत्कालानलप्रख्यं तडित्कोटि समप्रभं । २ ।
सूर्यकोटि प्रतीकाशं चंद्रकोटि सुशीतलं ।
चंद्रमंडल मध्यस्थं विष्णुमव्यं अच्युतं । ३ ।
श्रीवत्स कौत्सुभोरस्कं दिव्यरत्न विभूषितं ।
पीतांबरं उदारांगं वनमाला विभूषितं । ४ ।
सुंदरं पुंडरीकाक्षं किरीटेन विराजितं ।
षोडशस्त्री परिवृत्तं अप्सरोगणसेवितं । ५ ।
ऋग्यजु:सामाथर्वाद्यौर्गीयमानं जनार्दनं ।
चतुर्मुखाद्यै देवेशै: स्तोत्राराधन तत्परै: । ६ ।
सनकाद्यैर्मुनिगणै: स्तूयमानं अहर्निशं ।
त्रियंबको महादेवो नृत्यते यस्य सन्निधौ । ७ ।
दधिमिश्रान्नकवलं रुक्मपात्रं च दक्षिणे ।
करे तु चिंतयेत् वामे पीयूषं अमलं सुधी । ८ ।
साधकानां प्रयच्छंतं अन्नपानं अनुत्तमं ।
ब्राह्मे मुहूर्ते चोत्थाय ध्यायेद् देवं अधोक्षजं ।९ ।
अतिसुविमलगात्रं रुक्मपात्रस्थमलन्नं
सुललितदधिखंडं पाणिना दक्षिणेन । १० ।
कलशं अमृतपूर्णं वामहस्ते दधानं
तरति सकल दु:खात् वामनं भावयेद्य: । ११ ।
क्षीरं अन्नं अन्नदाता लभेदन्नाद एव च ।
पुरस्तादन्नं आप्नोति पुनरावृत्तिवर्जितं । १२ /
आयुरारोग्यं ऐश्वर्यं लभते चान्नसंपद: ।
इदं स्तोत्रं पटेद्यस्तु प्रात:काले द्विजोत्तम: ।
अक्लेशादन्न सिद्ध्यर्थं ज्ञानासिद्ध्यर्थमेव च । १३ ।
अभ्रश्याम: शुभ्रयज्ञोपवीती सत्कौपीन: पीतकृष्णाजिनश्री: ।
छत्री दंडी पुंडरीकायताक्ष: पायाद्देवो वामनो ब्रह्मचारी । १४ ।
अजिन दंड कमंडल मेखल रुचिर पावन वामन मूर्तये ।
मित जगत्रितयाय जितारयॆ निगम वाक्पटवे वटवे नम: । १५ ।
श्रीभूमिसहितं दिव्यं मुक्तामणि विभूषितं ।
नमामि वामनं विष्णुं भुक्तिमुक्तिफलप्रदं । १६ ।
वामनो बुद्धिदाता च द्रव्यस्थो वामन: स्मृत:।
वामनस्तारकोभ्याभ्यां वामनाय नमो नम: । १७ ।
॥ इति वामन पुराणे दधि वामन स्तोत्रं संपूर्णं ॥
பெரும் பொன்….
பல்லவி
பெரும் பொன் மலையெனக் காட்சி தரும் வாமனனை
இருகைகூப்பி வணங்கித் துதித்தேன்
அனுபல்லவி
அருமையான ஸ்படிகமென விளங்கும்
திருமாலைத் திங்கள் திருமுகத்தானை
சரணங்கள்
கமலாசனத்தில் வீற்றிருப்பவனை
சந்திர மண்டலத்தின் நடுவிலுறைபவனை
பெருநெருப்பின் ஒளியைப் பழிக்குமொளியுடையவனை
கோடி மின்னல்களின் தேசுடையவனை
பலகோடி சூரியனை மிஞ்சுமொளியுடையவனை
நிலவு மண்டலத்தின் நடுவிலிருப்பவனை
நிலவின் குளிர்ச்சி போல் குளிர்ந்திருப்பவனை
அச்சுதனெனும் பெயருடைய திருமாலை
வனமலையணிந்தவனை வடிவானவனை
துளபம் கௌஸ்துபம் மணிமாலை புனைந்தவனை
அணிமணிகள் திவ்ய ஆபரணமணிந்தவனை
மஞ்சள் நிறப்பட்டுப் பீதாம்பரமணிந்தவனை
கமலக்கண்ணனைக் கமலநாபனை
அமரருலகின் ஈரெட்டு திருமகள்
சுமுகமாயருகில் சூழ்ந்திருப்பவனை
விமலனை வைரக் கிரீடமணிந்தவனை
சனகசனந்தன முனிவர்கள் மற்றும்
அனைத்து மறைகளும் அகில லோகங்களும்
அனவரதம் வணங்கித் துதித்துப் போற்றும்
ஜனார்த்தனனை தாமோதரனை
பிரமனுமமரர்களனைவரும் கூடி
கரம் சிரம் பணிந்தேத்தித் துதிப்பவனை
அரன் முக்கண்ணனுமவன் முன்னே
திறம்பட நடமாடி களித்திருக்கச் செய்பவனை
தயிருடன் கலந்த அன்னம் தனை
தங்கப் பாத்திரத்தில் தட்சிணையுடனே
கரத்திலேந்தி படைத்திடச் செய்தால்
அமுதமெனக் கொள்ளும் அச்சுதனை
அறிவுக்கெட்டாத பரம்பொருளவனை
அதிகாலையனுதினம் வேண்டித்துதித்து
படைத்திடுமடியாரனைவருக்குமருள்
கிடைத்திடச்செய்யும் கருணாகரனை
அப்பழுக்கற்ற மனத்துடனே
தயிரமுதைத் தங்கப் பாத்திரத்தில்
துப்புரவுடன் படைக்குமடியார்க்கு
ஒப்பிலா அருள் தரும் வாமனனை
தண்டமும் கமண்டலமும் மான்தோலும் பூணூலும்
பஞ்ச பாத்திரமும் தாழங்குடையுமேந்தி
பொன்னரையில் தங்கராணள் பூண்டு
மங்களமாய்க் காட்சி தருமந்தணச் சிறுவனை
No comments:
Post a Comment