அலகிலாவிளையாடல்…..
பல்லவி
அலகிலா விளையாடல் பல புரிந்த கேசவனை
உலகளந்த பெருமாளை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
நலம் தரும் நான்கு வித மூர்த்திகளாயெழுந்தருளி
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
சரணம்
குலம் கல்வி செல்வம் நல்வாழ்வு புகழென்று
பலவிதமாயடியர்க்கு அருள் தருபவனை
நிலமகள் அணிமா மலராளுடனிருக்க
தலங்களுள் சிறந்த நீர்மலையில் வீற்றிருக்கும்
No comments:
Post a Comment