தண்தாளும் திண்தோளும் *
எனக்குத்துணை இருக்கையில் *
தென் தேவர் வந்து வந்து *
என்னையும் வதைப்பரோ? *
விண்தேவர் தேரில் வந்து *
இங்கு என்னை மீட்ப்பரே! *
தண்துழாய் மாலை மார்பன் *
இருக்கும் இடம் சேர்ப்பரே!
****திருவரங்கத் திருவைந்து - 5
தண்மதி முகத்தான்…..
பல்லவி
தண்மதி முகத்தான் தாமரை நாபன்
கண்ணனவன் நாமம் நாளும் நான் துதித்திட
அனுபல்லவி
திண் தோளரங்கன் என் துணையிருக்க
மண் மகளென் வேண்டுதலை எடுத்துச்சொல்லிட
சரணம்
பண்ணிசைத்தவனையே நாவாரப் பாடி
எண்ணித் துதித்திடும் எனையே காக்க
விண்தேரில் வந்தவனும் தன்னோடு சேர்ப்பான்
தண் துழாய் மாலை மார்பன் மாதவன் கேசவன்
No comments:
Post a Comment