- தலைமகள் தூதுவிடல்
2827 என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (4)
2827. O andril birds, you have a lovely blue color.
The dark cloud-colored god
doesn’t know how I suffer for his love
and doesn’t come to me and tell me,
"Don’t worry."
What can I say to describe my love to him?
Go and tell him whose nature is so wonderful and sweet
that she will not survive
if she has to be apart from him any more.
O andril birds, will you help me or not?
நன் நீலவண்ணம்…….
பல்லவி
நன் நீலவண்ணம் கொண்ட அழகிய பறவைகளே
அன்றில்காள் நீங்கள் உடன் போய் தூது சொல்வீர்
அனுபல்லவி
இன்றுமென் கேசவனைக் காணக் காத்திருக்கேனென
நன்றவரிடம் சென்றென் ஆற்றாமை எடுத்துரைப்பீர்
சரணம்
என்னென்று சொல்வேனென் கார்வண்ணன் தனக்கே
இன்னதென் விரகமென்றும் என் தாபமிதுவன்றும்
கன்னலவன் இன்னும் எனைக் காணவரவில்லையெனில்
என்னுயிர் தரிக்காதென எங்கனம் எடுத்துரைப்பேன்
No comments:
Post a Comment