கண்ணெதிரே……
பல்லவி
கண்ணெதிரே அழகு மீனாக்ஷியைக் காண
புண்ணியம் பல கோடி செய்தேன் நானே
துரிதம்
அயனரனரியும் கடவுளரனைவரும்
வணங்கித் துதித்திடும் வடிவுடையாளை
அனுபல்லவி
வெண்ணிலாப் பிறையணிந்த தாமரைக்கரத்தாளை
கண்ணன் கேசவன் சோதரியை ஈச்வரியை
சரணம்
விண்ணாளும் மகபதியும் மண்ணாளும் மகிபதியும்
அண்ணாந்து பார்த்து கை கூப்பித் தொழுமழகை
மண்மகளும் கலைமகளும் பணிந்தேத்தும் காரிகையை
எண்ணிலா முனிவர்களுமமரரும் பணிபவளை
No comments:
Post a Comment