மருந்தறியேன் மணியறியேன்
மந்திரம் ஒன்றும் அறியேன்
மதியறியேன் விதியறியேன்
வாழ்க்கை நிலையறியேன்
திருந்த அறியேன்
திருவருளின் செயலறியேன்
அறம்தான் செய்தறியேன்
மனம் அடங்கும் திறத்தினில்
ஓரிடத்தே இருந்தறியேன்
அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தை பிரான் மணிமன்றம்
எய்த அறிவேனோ...
இருந்த திசை சொல்ல அறியேன்
எங்ஙனம் நான் புகுவேன்
யார்க்கு உரைப்பேன் ?
என்ன செய்வேன் ?
ஏதும் அறிந்திலேனே...?
திருமாலே கேசவனே…..
பல்லவி
திருமாலே கேசவனே நீயே எந்தன் கதி
வருந்தித் துதிக்குமெனை ஆண்டருள்வாயே
அனுபல்லவி
பருந்தரசன் மீதமர்ந்து பறந்து செல்லும் மாலே
அருந்தவ முனிவர்கள் அமரர்கள் போற்றும்
சரணம்
மருந்தும் மணியும் மந்திரமும் நானறியேன்
திருவையுமுனையும் தினம் துதித்தறியேன்
திருந்திடும் வழியறியேன் உனைத்துதிக்கும் மொழியறியேன்
அறிந்தோரையும் அறியேன் முறையிடவோரிடமறியேன்
இருந்தறியேன் ஓரிடத்தில் அறம் நான் செய்தறியேன்
இருக்கும் திசை ஏதென்றும் ஒன்றும் நான் அறிந்திலேன்
யாரை நான் கேட்பேன் எவரிடம் முறையிடுவேன்
பாரில் உனையன்றி வேறு துணை எனக்கில்ல
No comments:
Post a Comment