எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
(எப்படி பாடினரோ)
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
அடியாருனைப்போற்றி…..
பல்லவி
அடியாருனைப் போற்றிப் பாடியது போலவே
அடியேனும் பாடிட ஆசை கொண்டேன் கேசவனே
அனுபல்லவி
கடினமில்லா அழகு பழகு தமிழ்ச் சொல்லால்
நெடியோனே காதலினாலன்புடனுருகி
சரணம்
வடிவான பரிபாடல் பாடிய புலவருடன்
துடிப்புடனே ஆழ்வார் பன்னிருவர் மற்றும்
படித்த அறிஞர் வேதாந்த தேசிகரும்
உடையவரும் புலவர் வேங்கடகவியுமென
No comments:
Post a Comment