வாய்மொழிந்து வாமனனாய்* மாவலிபால்,* மூவடிமண்
நீஅளந்து கொண்ட நெடுமாலே,* - தாவியநின்
எஞ்சா இணைஅடிக்கே* ஏழ்பிறப்பும் ஆளாகி,*
அஞ்சாது இருக்க அருள்.
கோவலூர்….
பல்லவி
கோவலூர் தனிலே கோவில் கொண்டிருக்கும்
பூவண்ண மேனியனே தேகளீசனுனைப் பணிந்தேன்
அனுபல்லவி
பாவை பூங்கோவல் நாச்சியாரைத் தன் மார்பில்
பூவென வைத்திருக்கும் திருமாலே கேசவனே
சரணம்
மாவலியிடம் சென்று மூவடி மண் கேட்டு
தாவி நீயளந்த இணையிலா உன் சேவடியை
மேவியே பற்றி எழ் பிறப்புமுனைத் துதித்தேன்
பாவியேன் எனை நீயே ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment