சென்ற நாள், செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள், எந் நாளும் நாள் ஆகும் - என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய்''
''ஒவ்வொரு நாளும் திருநாள், ஆமாம் திருமால் நாள், எனவே, கடந்த நாள், நடக்கும் நாள், இனி கிடைக்கும் நாள், எல்லாமே எங்கள் திருமால் நாமத்தை வாயினிக்க நா மணக்க உச்சரிக்கவே தான், எந்நாளும் இவனே எம் இறவாத எந்தை, அவன் திருவடிக்கே நாம் ஆளானோம், இதை மறவாது அவனைப் போற்றியே ஒயாமல் பாடு, பேசு, வாழ்த்து என் வாயே!
auspicious when we acknowledge the red lotus-eyed SrimaN nArAyanA as our
Lord (our eternal wellwisher, saviour and the one who loves us
unconditionally). Let me seek refuge under His two feet and glorify Him
incessantly.
இன்றும் நேற்றும்…..
பல்லவி
இன்றும் நேற்றும் நாளையும் மற்றும்
என்றும் எப்போதும் நாள் நல்ல நாளே
அனுபல்லவி
அன்றும் இன்றும் எந்நாளும் மறவாது
தொன்று தொட்டிறவாத நம் தந்தையைத் துதிப்போர்க்கு
சரணம்
அன்றிவ்வுலகளந்த எம்பெருமான் தாடாளன்
சென்றிலங்கையரக்கன் கதைமுடித்த ஶ்ரீராமன்
கொன்று கம்சனை வதம் புரிந்த கேசவன்
நன்றந்த நாரணன் நாம முரைப்போர்க்கு
No comments:
Post a Comment