திகடச் சக்கரம்’ என்றால், ‘திகழ் தசக்கரம்’ என்று பொருள். அதாவது, திகழ்கின்ற பத்து கரங்களை உடையவன், செம்முகம் ஐந்து உடையவன் என்று விநாயகப் பெருமானைக் குறிப்பிடுகிறது இந்த வரி. அதையே தொடக்கமாகக் கொண்டு கச்சியப்பர் பாடத் தொடங்கினார்.
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
விளக்கம் : திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!
அரனயனரி பணி….
பல்லவி
அரனயனரி பணி துங்க க்கரிமுகனை
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
புரமெரித்த பரமன் ஈசன் சிவன் மகனை
சுரபதி ரதிபதி வணங்கிடும் கணபதியை
சரணம்
கரமைந்திருபுறமுடையவனை உமை மகனை
அரவிந்த மலர் மீது வீற்றிருப்பவனை
கரங்களில் சக்கரப் படை வைத்திருப்பவனை
சிரமைந்து கொண்டவனைக் கேசவன் மருகனை
No comments:
Post a Comment