அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினைகெடுக்கும்,*
நச்சுமா மருந்தம் என்கோ.* நலங்கடல் அமுதம் என்கோ,*அச்சுவைக் கட்டி என்கோ.* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச்சுவைத் தேறல் என்கோ.* கனியென்கோ. பாலெங்கேனோ.
அச்சுதன் அமலன் என்கோ,* — (பெருமானே! உன்னை) அழிவில்லாதவன் என்பேனா? குற்றமற்றவன் என்பேனா?
அடியவர் வினைகெடுக்கும்,* — பக்தர்களின் பாவங்களை (பிணிகளை) போக்கும்
நச்சுமா மருந்தம் என்கோ.* — மிக விரும்பத்தக்க உயர்ந்த மருந்து என்பேனா?
நலங்கடல் அமுதம் என்கோ,* — பாற்கடல் அமுதம் என்பேனா?
அச்சுவைக் கட்டி என்கோ.* — நற்சுவை உடைய கறுப்புக் கட்டி என்பேனா?
அறுசுவை அடிசில் என்கோ,* — ஆறுவகைச்சுவை கொண்ட உணவு என்பேனா?
நெய்ச்சுவைத் தேறல் என்கோ.* — (இனிப்போடு)நெய்யின் சுவையும் கலந்த தேன் என்பேனா?
கனியென்கோ. பாலெங்கேனோ. — கனி என்பேனா? பால் என்பேனா?
(எல்லா வகைச் சுவைகளும் ஒரு சேரக் கொண்ட உன்னை என்னவென்று அழைப்பேன் ?) என்ன சொல்லி……
பல்லவி
என்ன சொல்லி உன்னைத் துதிப்பேன்
சென்ன கேசவா உன்னருள் பெறவே
அனுபல்லவி
பன்னகசயனனே பரம பதநாதனே
தன்னிகரில்லாத தனிப்பெரும் புகழ்த்தேவே
சரணம்
கன்னலென்றோ தேனென்றோ அறுசுவை அடிசிலென்றோ
இன்னமுதென்றோ பிணி போக்கும் மருந்தென்றோ
தின்னத் தெவிட்டாத நெய்கலந்த இனிப்பென்றோ
இன்னும் கனியெனவோ சுவையான பாலெனவோ
No comments:
Post a Comment