*மண்ணாள நின்றவர் தம்* *வாழ்வு* *வேண்டேன்...*
*மற்றவர் போல் பற்றடைந்து* *மாள வேண்டேன்...*
*விண்ணாள நின்ற ஒரு* *மேன்மை* *வேண்டேன்...*
*வித்தக நின் திருவருளே* *வேண்டி* *நின்றேன்...*
*புண்ணாள நின்ற* *மனமுடையேன்*
*பொய் அனைத்தும்* *திருவுளத்தே* *பொறுப்பாய்*
*கண்ணாள சுடர்* *கமலக் கண்ணா*
*எனைக் கைவிடில்* *என்ன செய்வேன்* *கடையவனேன்...*
அண்ணாந்து…….
பல்லவி
அண்ணாந்து பார்த்துந்தன்னடி தொழுதேன் கேசவா
அண்ணாமலையினடி தேடிய திருமாலே
அனுபல்லவி
பண்ணாயிரம் பாடியுனைத் துதிக்க வரமருள்வாய்
உண்ணாமுலையம்மை சோதரனே மாதவனே
சரணம்
மண்ணாளுமரச வாழ்வெதுவும் வேண்டேன்
விண்ணாளுமிந்திரப் பதவியும் வேண்டேன்
பெண்ணாசைப் பேராசை கொண்டலையும் சில
அண்ணாவி போலலைந்து மடியும் வாழ்வு வேண்டேன்
புண்ணியம் செய்யாத பொய் மட்டுமே உரைக்கும்
கண்ணியமில்லாத என் பிழை பொறுத்து
தண்டனிட்டுப் பணியுமெனைக் கைவிடாதிருக்க வேண்டி
கண்ணாளா சுடர் கமலக் கண்ணா……
No comments:
Post a Comment