தாயென இருந்தாயே……
பல்லவி
தாயென இருந்தாயே தாயுமானவனே
நீயேயென் துணை சிவபெருமானே
அனுபல்வி
மாயன் கேசவன் நேசனே ஈசனே
பேயனே பித்தனே சுடலைப்பொடி அணிபவனே
சரணம்
அருந்திய நஞ்சை கழுதினிலிருத்திய
நஞ்சுண்ட கண்டனே நமச்சிவாயனே
திருந்தாதவரை வருந்தச் செய்பவனே
வருந்தித் துதிப்பவர்க்கு விருந்தானவனே
அருந்தவ முனிவருக்கும் ஞானியர்க்கும் யோகியர்க்கும்
மருந்தாய் விளங்கும் மருந்தீச்வரனே
விருந்தாய்ப் பிள்ளைக்கறியுண்ட சிவனே
அருந்தேனே உனைப்பணியும் அடியாரனைவருக்கும்
No comments:
Post a Comment