கமலாம்பாள் நீயே……
பல்லவி
கமலாம்பாள் நீயே எனைக் காத்தருள்வாயே
செம்பருத்தி மலரென சிவந்திருப்பவளே
துரிதம்
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
சுகசனகாதியரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
உமா மகேச்வரியே கேசவன் சோதரியே
ரமா வாணி கல்யாணி கௌரியே
சரணம்
சமானமொருவருமில்லாதவளே
குமார ஜனனியே பாலாம்பிகையே
அபார கருணையளித்திடும் தாயே
காமகோடி பீடத்துறைபவளே
சாமகானந்தனில் மனம் மயங்கிடும்
காமேச்வரியே மாகாளி பைரவியே
வாக்கினதிபதியே வாகீச்வரியே
ஶ்ரீசக்ர ராஜ சி்ம்மாசனச்வரியே
சங்கரன் பங்கிலுரை சிவசங்கரியே
அங்கயற் கண்ணியே அகிலாண்டேச்வரியே
பொங்கரவணிந்தவளே திரிபுரசுந்தரியே
மாமேருதனிலமர்ந்த ஶ்ரீ லலிதாம்பிகையே
No comments:
Post a Comment