பங்கயநாபன் ……
பல்லவி
பங்கய நாபன் கேசவன் சோதரி
சங்கரி எனையே காத்தருள்வாயே
துரிதம்
திங்கள் ஞாயிறு சுகசனகாதியர்
அங்கமில் ரதிபதி சுரபதி நரர் சுரர்
நாரதர் நான்முகன் முருகன் கணபதி
கரம் பணிந்தேத்தும் லலிதாம்பிகயே
அனுபல்லவி
பங்கய மலரேந்தும் கரத்தாளே பார்வதி
சங்கரன் பங்கிலுறை சாமகானப்ரியே
சரணம்
அங்கயற்கண்ணி நீ அகிலாண்டேச்வரி நீ
பொங்கரவுக்குடையின் கீழமர்ந்திருக்கும் மாரி நீ
சிங்கவாகனி சிவகாமேச்வரி
மங்காத புகழ் மேவும் திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment