பாராருல கும்பனி மால்வரையும்
கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்
காரா தென நின்றவ னெம்பெருமான்
அலைநீருல குக்கரசாகிய,அப்-
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே
நீர்வண்ணப்பெருமாளை….
பல்லவி
நீர்வண்ணப் பெருமாளைக் கேசவனை மாதவனை பார் போற்றும் பரமனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி கார்குழலாளணிமாமலராளுடனிருக்கும் தேர்ப்பாகனானவனைத் திருமாலை நாரணனை
சரணம்
பாருலகும் பானுசந்திரரும் கடல் நீருமனைத்துமுண்டும் போதாதெனவே இருபத்தொரு தலைமுறை அரசகுலம்தனை வேரறுத்து நீர்மலைமேல் நின்று காட்சி தரும்
No comments:
Post a Comment