கைவிடலாகுமோ……
பல்லவி
கைவிடலாகுமோ கேசவா எனை நீயே
செய்யாதன செய்யாமல் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
பையத்துயில் கொண்ட பாற்கடல் வாசனே
மையிருட்டு நிறத்தோனே மதுசூதனனே
சரணம்
மெய்யான பக்தியுடன் உனையே துதித்தேன்
பொய்யான வாழ்விது என்றறிந்து தெளிந்தேன்
வையத்திலே கருப்பையில் பிறவாமல்
ஐயனே எனை நீ ஆட்கொள்ள வேண்டினேன்
No comments:
Post a Comment