நின்றும் இருந்தும்…..
பல்லவி
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
என்றுமெனையாளும் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
அன்று அரக்கரையும் வென்று தடுத்தாட்கொண்ட
குன்றுதனைக் குடையாக்கி குவலயம் காத்தவனை
சரணம்
கன்றைக்காக்கும் தாய்ப்பசு போலெனைக் காத்து
நன்று செய்யும் நாரணனை நாகத்தணையானை
சென்றிலங்கையரக்கன் சிரமறுத்த ராகவனை
பன்றி வடிவெடுத்து அகிலம்தனை மீட்டவனை
No comments:
Post a Comment