Wednesday, 28 September 2022

முனைந்தந்தத் திருமாலை……

முதலாவதாக,  தேவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். இரண்டாவதாக,  நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.  மூன்றாவதாக,  இதர உயிர்வாழிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். உதாரணமாக, பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம். நான்காவதாக பித்ருக்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம். ஐந்தாவதாக குடும்ப அங்கத்தினருக்கு. தாய், தந்தை, சகோதரர், சகோதரி, சேவகன், கணவன், மனைவி, குழந்தைகள் எனப் பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம். 

ஆறாவதாக மனிதகுலத்திற்குக் கடன்பட்டுள்ளோம் விவசாயிகள், பால் கொண்டு வருபவர், காய்கறிகள் விற்பவர்கள் மற்றும் பலர் இவர்களுக்கு எந்த விதத்திலும் அடைக்க முடியாது

#கடனிலிருந்து #விடுபடுவது_எப்படி? இந்த ஆறுவித கடன்களையும் எந்த ஜென்மத்திலும் யாராலும் முழுமையாக அடைக்க முடியாது.  அப்படியெனில், இந்தக் கடன்களை அடைப்பதற்கான வழி என்ன

देवर्षिभूताप्तनृणां पितृणां
न किङ्करो नायमृणी च राजन् ।
सर्वात्मना य: शरणं शरण्यं
गतो मुकुन्दं परिहृत्य कर्तम् ॥ ४१ ॥

O King, one who has given up all material duties and has taken full shelter of the lotus feet of Mukunda, who offers shelter to all, is not indebted to the demigods, great sages, ordinary living beings, relatives, friends, mankind or even one’s forefathers who have passed away. Since all such classes of living entities are part and parcel of the Supreme Lord, one who has surrendered to the Lord’s service has no need to serve such persons separately

தேவர்ஷி-பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்

ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்

ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்

கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்

"எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாதகமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன்படுவதில்லை." புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம், அனைத்து கடமைகளும்  தாமாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன. 



                                                        முனைந்தந்தத் திருமாலை……

                                                                  பல்லவி

                                                முனைந்தந்தத் திருமாலை நாராயணனை

                                                மனத்தினிலிருத்தி அனுதினம் துதிப்போம்

                                                                அனுபல்லவி

                                                அனைத்துமவனேயென  பரிபூரணமாய்

                                                 மனத்துள் நினைந்து அவன் பதம் பணிந்து    

                                                                    சரணம்                                                                                                                                                                                      

                                                அனைத்தும் விட்டொழித்துக் கேசவனைப் பணிவோர்

                                                மனைமக்கள் தேவர் முனி மூதாதையர் மற்றும்

                                                வினைப்பயனகளென எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை

                                                நினைத்தவனைப் பணிவோர்க்கு நலமனைத்துமவன் தருவான்                                                                                                                            

No comments:

Post a Comment