நீயேயெனை…….
பல்லவி
நீயேயெனை மறந்திடலாமோ
மாயே மரகதமே ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
தாயே தன் மகவை மறந்திடலாகுமோ
தூயவளே உனை அனுதினம் துதித்தேன்
சரணம்
காயாம்பூ வண்ணன் கேசவன் சோதரி
நோய் தீர்க்கும் மருந்தே நோயளிக்கலாகுமோ
நேயமுடன் எனையே காத்தருள வேண்டினேன்
தேயாத புகழ் மேவும் மீயச்சூர் தலத்துறையும்
No comments:
Post a Comment