Monday, 19 September 2022

புண்ணியம் செய்தேன்…..

 திவ்யதரிசனம்

விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,* 

நடுவே வந்து*  உய்யக் கொள்கின்ற நாதனை,*

தொடுவே செய்து*  இள ஆய்ச்சியர் கண்ணினுள்,* 

விடவே செய்து*  விழிக்கும் பிரானையே.

நம்மாழ்வார்திருவடிகளேசரணம்

ஓம்நமோநாராயணாய🙏🙏🙏

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே?

முதல் இரண்டு வரி பக்தி இயக்கத்தின் உணர்வுப்பெருக்கின் அடையாளம்.. விடுவேனா என் விளக்கை? என் ஆவியை? நான் போன பாதையில் நடுவே வந்து மறித்து ஆட்கொண்ட தெய்வத்தை நான் விடுவேனா? ஆனால் இரண்டாவது வரிதான் மிகவும் சுவாரசியமானது. ஆய்ச்சியரை தொட்டு அவர் உள்ளத்தில் குடிபுகுந்து அவளுடைய அழகிய கண்களில் காதலென வெளிப்படும் கண்ணனை நான் விடுவேனா? தெருவில் பார்க்கும் ஆய்ச்சியரின் கண்களின் அழகாக வெளிப்படக்கூடியவன் கண்ணன். அந்தக் கண்ணனை நான் விடுவேனா. 

How can I leave emperumAn who is the one who lights my true knowledge, who entered my soul at the opportune time to uplift me, who is the one performing favours such as the mischievous pastimes with the youthful cow-herd girls by exchanging subtle glances, etc, with them [and there by attracting them to be totally dependent on him]?


                                                      புண்ணியம் செய்தேன்…..


                                                             பல்லவி

                                  புண்ணியம் செய்தேன் நான் கண்ணனின் லீலைகளை

                                  கண்டு களித்திட ஆய்ச்சியர் விழி வழியே

                                                           அனுபல்லவி

                                    மண்ணிலிந்த பாக்கியத்தை எனக்களித்த மாதவனை

                                  எண்ணித்துதித்தேன் திருவடி பணிந்தேன்       

                                                            சரணம்                                                   

                                  வெண்ணை திருடிய கண்ணனைக் கண்களில்

                                  திண்ணமுறக் கைது செய்த இடைச்சியர் விழிகளில்

                                  வண்ணமுடன் காட்சி தரும் வடிவழகன் கேசவனை

                                 பெண்ணே விடுவேனோ என் விளக்கையாவியை

                                  

                                  

No comments:

Post a Comment