சிவபெருமான் முதலியோரால் போற்றப்படும் த்ரிபுரஸுந்தரி யின் திருவடியினைக் காலையில் நினைந்து வணங்குகிறேன். அவளது அருளாாலயே பிரம்மன். விஷ்ணு, ருத்ரன் ஆகியோர் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயலைச் செய்கின்றனர். அம்பிகையின் தொடர்பு பெற்ற கங்கையை, சிவபெருமான் தம் தலையிலேந்திப் போற்றுகிறார். கதிரவனின் கிளரொளிபோல் பிரகாசிக்கும் த்ரபுர சுந்தரியின் அருளால் உலகமே ப்ரகாசித்து இயங்குகிறது அம்பிகையைப்பற்றிய இந்த ஐந்து ச்லோகங்களையும் தினமும் காலையில் படிப்போற்கு அல்லல் அகன்று, அவளருள் கிட்டும்.
श्रीत्रिपुरसुन्दरी प्रातःश्लोकपञ्चकम्
प्रातर्नमामि जगतां जनन्याश्चरणाम्बुजम् ।
श्रीमत्त्रिपुरसुन्दर्या नमिता या हरादिभिः ॥ १॥ var प्रणताया
प्रातस्त्रिपुरसुन्दर्या नमामि पदपङ्कजम् ।
हरिर्हरो विरिञ्चिश्च सृष्ट्यादीन् कुरुते यथा ॥ २॥
प्रातस्त्रिपुरसुन्दर्या नमामि चरणाम्बुजम् ।
यत्पादमम्बु शिरसि भाति गङ्गा महेशितुः ॥ ३॥
प्रातः पाशाङ्कुशशराञ्चापहस्तां नमाम्यहम् ।
उदयादित्यसङ्काशां श्रीमत्त्रिपुरसुन्दरीम् ॥ ४॥
प्रातर्नमामि पादाब्जं ययेदं धार्यते जगत् । var भासते जगत्
तस्यास्त्रिपुरसुन्दर्या यत्प्रसादान्निवर्तते ॥ ५॥
यः श्लोकपञ्चकमिदं प्रातर्नित्यं पठेन्नरः ।
तस्मै ददात्यात्मपदं श्रीमत्त्रिपुरसुन्दरी ॥ ६॥
इति श्रीत्रिपुरसुन्दरीप्रातःश्लोकपञ्चकं सम्पूर्णम् ।
திரிபுரசுந்தரியின்….
பல்லவி
திரிபுரசுந்தரியின் திருவடி பணிந்தேன்
அரியயனரன் பணியும் ஶ்ரீலலிதா
அனுபல்லவி
கிரிதரன் கேசவன் சோதரி கௌரி
பரிவுடனெனக்கருள வேண்டுமெனத்துதித்து
சரணம்
விரிசடைதனிலே கங்கையை வைத்திருக்கும்
திரிபுராந்தகன் கங்காதரன் போற்றும்
கிரிமகளைக் கதிரொளியென விளங்கும்
கருஞ்சிவப்பு நிறத்தாளை அதிகாலை துதித்தேன்
No comments:
Post a Comment