உடலுனது…..
பல்லவி
உடலுனது சொந்தமென்றால் அதன் வலியுமுனதன்றோ
கடல் நடுவே கிடந்துறங்கும் கேசவன் நீயறியாயோ
அனுபல்லவி
இடர் பிணி கவலைகள் அனைத்துமளிப்பவன் நீயே
படமெடுத்த பாம்பணையில் படுத்திருக்கும் திருமாலே
சரணம்
சடலம் மட்டும் நானுள்ளிருக்குமுயிர் நீயே
விடமுண்ட கண்டனும் பிரமனும் மற்றும்
கடவுளரனைவரும் வணங்கிடும் நாராயணனே
நோய் தீர்க்கும் மருந்தே நீ நோயளிக்கலாகுமோ
No comments:
Post a Comment