கானம்தனில் திளைக்கும்……
பல்லவி
கானம்தனில் திளைக்கும் சென்ன கேசவனை
ஆனிறை மேய்ப்பவனை அனுதினம் துதித்தேன் ( வேணு)
அனுபல்லவி
வானையும் மண்ணையும் மூவடியாலளந்தவனை
தீனசரண்யனை வாமன மூர்த்தியை
சரணம்
பானுகுல திலகன் ஶ்ரீராமனாகவும்
மீனாயாமையாய் வராகமாகவும்
நானாவிதமா அவதரித்தவனை
தானந்தமில்லாத நாராயணனை
No comments:
Post a Comment