முதலில்…….
பல்லவி
முதலில் துதித்தேன் கணபதியே உனது
பதம் பணிந்து இதம் பெறவே அனுதினம் வேண்டி
துரிதம்
கணங்கள் நந்தி பிரமன் சுரபதி
அணங்குகள் சித்தி புத்தி நரர் சுரர்
வணங்கிடும் சுமுகனே ஓங்காரப் பொருளே
குணநிதி நீயே குகசோதரனே
அனுபல்லவி
சதாசிவன் மகனே கேசவன் மருகனே
உதாரசீலனே உமையாள் மைந்தனே
சரணம்
இதமுடன் தடையறக் காரியம் நடைபெற
முதலிலனைவரும் வணங்கிடும் தெய்வமே
சதமல்ல இவ்வுலக வாழ்வென்றறிந்தே
நிதமுனை வேண்டினேன் எனக்கருள்வாயென
No comments:
Post a Comment