ஒளிவண்ணம் வளைசிந்தை
உறக்கத்தோ டிவையெல்லாம்,
எளிமையா லிட்டென்னை
ஈடழியப் போயினவால்,
குளிரருவி வேங்கடத்தென்
கோவிந்தன் குணம்பாடி,
அளியத்த மேகங்காள்.
ஆவிகாத் திருப்பேனே.
எண்ணம்தனையெடுத்து….
பல்லவி
எண்ணம்தனையெடுத்துச் சொல்வீரே நீங்கள்
வேங்கடத்தருவி நீர் உண்டு செல்லும் மேகங்களே
அனுபல்லவி
கண்ணனவன் வரவுக்காய் காத்திருந்து காத்திருந்து
கண்ணுறக்கமிழந்து காதல் நோய் வந்ததென
சரணம்
வண்ணம் குலைந்து வாடியதென் தேகம்
திண்ணம் குறைந்தென் கைவளைகள் நழுவியது
இன்னமென் மோதிரங்கள் கைவளைகளானது
கன்னலென் கேசவன் புகழ் பாடிக் காத்திருக்குமென்
No comments:
Post a Comment