*🌹#வடிவுடை_அம்மன்_மாணிக்க_மாலை*
*அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்*
*குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே*
*பணியேன்* *பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா*
*மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.*
*அவள் அணிகளுக்கு அழகினை அளிப்பவள். அழகர் தியாகேசரின் அன்பிற்கு இனியாள். அனைத்து நற்குணங்களும் கூடிய குணவதி. மலை அரசன் தவப் பயனாய் மகவாகப் பிறந்தவள். தேவர்கள் எப்பிழை செய்யினும் அதை நினையாது, நின்னைப் பணியாது இருப்பினும், அதனை பொருட் படுத்தாது, அவர்களை தடுத்து ஆட்கொண்ட சிந்தாமணி. நம் கண்ணின் கருமணி போன்றவள். வடிவுடை நாயகி. அவள் தாள் பணிவோம்.*
துணையென வீற்றிருக்கும்…..
பல்லவி
துணையென வீற்றிருக்கும் ஒற்றியூர் தியாகேசன்
இணையே வடிவுடை மாணிக்கமுனைப்பணிந்தேன்
அனுபல்லவி
அணையிற்றுயிலுறும் கேசவன் சோதரி
வணங்கிடுமெனையே காத்தருள வேண்டினேன்
சரணம்
தணியாத பிணிதீர்க்கும் நல்மருந்தே மரகதமே
அணியே அணிக்கழகே மலையரசன் மாதவமே
பணியாதமரர் செய்பிழை பொறுத்த சிந்தா
மணியேயென் கண்ணின் கருமணியே தேனே
No comments:
Post a Comment