மங்களம் தருபவளே………
பல்லவி
மங்களம் தருபவளே காமாக்ஷி
பங்கய பதம் பணிந்து துதித்தேன் உனையே
துரிதம்
அனங்கனிந்திரன் சுகசகாதியர்
தும்புரு நாரதர் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
சங்கடமிடர் களைந்து அருள் புரிபவளே
பங்கயநாபன் கேசவன் சோதரி
சரணம்
திங்கள் பிறையணிந்த சங்கரியே கௌரி
சங்கரன் பங்கிலுறை நித்ய கல்யாணி
அங்கயற்கண்ணியும் விசாலாக்ஷியும் நீ
மங்காத புகழ் மேவும் காஞ்சிபுரநாயகி
No comments:
Post a Comment