என்னைப் பாட……
பல்லவி
என்னைப் பாடச்சொல்லி மகிழ்ச்சியளித்திடும்
அன்னையே மகாலக்ஷ்மி உன்னை த்துதித்தேன்
துரிதம்
பொன்மாலை பூமாலை வைரமணி மாலை
இன்னும் பல அணிமணிகள் அணிந்திருப்பவளே
அனுபல்லவி
உன்னைத் தன் மார்பினில் வைத்திருக்கும் கேசவனை
பன்னக சயனனை நீங்காதுடனிருப்பவளே
சரணம்
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் மூத்தவளே
பன்னக பூஷணியும் பாரதியும் பணியும்
பொன் வண்ணத் திருமகளே மறைபோற்றும் அலைமகளே
உன்னருளாலன்றோ உலகனைத்துமியங்குவது
No comments:
Post a Comment