NavaDurgas - Brahmi, Maheshwari, Kaumari, Vaishnavi, Varahi, Indrani, Chamundi,
MahaLakshmi and Rajeshwari. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாந்தா, குஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி: இவை தான் நவ துர்கைகளாவர். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள். நவராத்திரியின் ஒன்பது இரவுகளில் வழிபடப்படுபவர்கள். பார்வதியின் பெயர்களில் சைலபுத்ரி ஒன்றாகும், இதன் பொருள் “மலைகளின் மகள்”. சிவனை அடைவதற்கு கடுமையாக வணங்கி பிரம்மச்சாரினி என்ற பெயரைப் பெற்றார். சந்திரகாந்தா என்றால் சிவனைப் போலவே தலையில் சந்திரனைத் தாங்கியவர் என்று பொருள். பிரம்மந்தா அல்லது பிரபஞ்சம் அனைத்தையும் கொண்டவர் குஷ்மந்தா என்று அழைக்கப்படுகிறார். ஸ்கந்தரின் தாயாக இருந்ததால், ஸ்கந்தமாதா என்ற பெயரைக் பெற்றார். மகரிஷி கத்யாயனாவின் மகள் என்பதால் அவருக்கு காத்யாயினி என்ற பெயரைக் கொடுத்தார். அவருடைய அழகான தோற்றத்திற்காக மஹாகௌரி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இதேப்போல், சித்திதாத்ரி மற்றும் காளராத்திரி போன்ற பெயர்கள் அவரது பல்வேறு வடிவங்களுக்காகவும், சிந்திகளை வழங்கி, துன்பங்களை தீர்க்கக்கூடியவர் என விவரிக்கின்றன.
நவதுர்கைகளை……
பல்லவி
நவதுர்கைகளை நாளும் நான் துதித்தேன்
உவகையளித்திடும் ஒன்பது தேவியரை
பவ பயம் பிணியிடர் கவலைகள் களைந்திட
தவமுனியோர் வணங்கும் தகைமையுடைய
புவனம் போற்றும் கேசவன் சோதரி
ப்ராம்மி வாராகி இந்த்ராணி மகேச்வரி
வைஷ்ணவி சாமுண்டி ராஜராஜேச்வரி
மகாலக்ஷ்மி கௌமாரி என்னும்
No comments:
Post a Comment